வரலாறு

சிங்களப் புத்தாண்டு உணவு மேசை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

கஹேடோவிட எனும் கிராமத்தில் ஆரம்ப காலம் தொட்டே சன்மார்க்கப் போதனைகள் நடைபெற்று வந்துள்ளன. இதன் வளர்ச்சியின் படியாக 1889 ஆம் ஆண்டு அப்துல்லாஹ் இப்னு உமர் பாதிப் அல் யெமனி மௌலானா அவர்களின் ஏற்பாட்டில் பள்ளி தலைவர் நூர்தீன் ஹாஜியரின் உதவியோடு தமிழ் பாடசாலை தற்காலிக கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்டது.

இது ஈழத்தின் வரலாற்றில் கூட பேசப்பட வேண்டிய ஒரு நிகழ்வு. ஏனெனில், 1882 இல் கொழும்பு சாஹிரா கல்லூரி மாண்புமிகு M.C. சித்திலெப்பை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது ஊரில் பிறந்த ஒவ்வொரு  பிரஜையும் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.

1889 ஆம் ஆண்டு தமிழ்ப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின், இதில் மர்ஹும் மக்தூம் ஹாஜியார் ஆரம்ப அதிபராக கடமையாற்றியுள்ளார்.

1903 ஆம் ஆண்டு மர்ஹும் மக்தூம் ஹாஜியார், மர்ஹும் அ.லெ.மு. சஹீதுலெவ்வை ஆகியோரின் அயராத முயற்சியினால் அடுத்த கட்டமாக பாடதிபிய்யா தக்கியாவோடு அமைந்த நத்ர் கந்தூரி மண்டபம் பாடசாலையாக மாற்றப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த S.N.S. கந்தையாபிள்ளை (1904-1920)அதிபராக கடமையாற்றியுள்ளார். இங்கு மர்ஹும் முஸ்தபா லெவ்வை, மர்ஹும் நூஹ் லெவ்வை, மர்ஹும் வஹ்ஹாபுத்தீன், மர்ஹும் மக்தூம் ஹாஜியார் ஆகியோர் ஆசிரியர்களாக கடமையாற்றியுள்ளனர்.

1920ஆம் ஆண்டு முதல் இக்கலாசலை அரச பொறுப்பில் இயங்கத்தொடங்கியது.இக்காலப்பகுதியில் O.C. ஜோசப்பிள்ளை என்பவர் அதிபர் பொறுப்பை ஏற்று பாடசாலையை நடத்தி வந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து 1922 - 1924 காலப்பகுதிக்குள் திரு S.N. தவனேசன் என்பவர் அதிபராக கடமையாற்றியுள்ளார்.அல் பத்ரியா வித்தியாலயம் நாளுக்கு நாள் கல்விப்பாதையின் சீராக பயணித்து கொண்டிருந்த காலகட்டத்தில் (1924-1927) திரு A.J.நல்லையா அதிபராக கடமையேற்று தனது பொறுப்பை அழகுற செய்து வந்துள்ளார்.

1927 ஆம் ஆண்டு அல் பத்தியா கல்வி கூட வரலாற்றில் J.H. ரொட்ரிகோ என்பவர் அதிபராக கடமையாற்றியுள்ளார். 1920 ஆம் ஆண்டு அரச பொறுப்பில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை தொடர்ந்தும் ஆண்களுக்கான பாடசாலையாகவே இருந்து வந்துள்ளது.

திரு J.H.கோவை அடுத்து திரு ஏ கோவில் பிள்ளை 1938 ஆம் ஆண்டு தனது தலைமை பொறுப்பை ஏற்று 1945 வரை தமது அதிபர் சேவையை இக்கலாசாலையில் செய்து வந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து அல்பத்ரியாவின் வரலாற்றின் திரு எஸ் கந்தப்பன் (1945- 1947) அவர்களும் திரு A. நோவா (1947-1951) அவர்களும் அதிபர்களாக இருந்துள்ளனர்.

கல்வி என்பது சமூகத்தின் நாடித்துடிப்பு அதற்காக உழைப்பவர்கள் தம்மை ஒரு மகத்தான பணியில் ஈடுபடுத்திக் கொண்டவர்கள். அல்பத்ரியாவின் கல்வி வரலாற்றின் 1959 ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றவர் மர்ஹும் அல்ஹாஜ் K.K. காசிம் அவர்கள் (1959-1968)இவர் அல் பத்ரியாவின் குறிப்பிடத்தக்க ஒரு மனிதராக விளங்கியுள்ளார்.

அல் பத்ரியா தனது கல்வி பயணத்தில், கல்வி விழிப்புணர்வு மிக்க ஒரு சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலம் அது. கஹடோவிடாவின் சூழவுள்ள அயற் கிராமங்களான ஒகொடபொல போல உடுகொட பிரதேச மாணவர்களும் கலாசாலையிலே கற்றுக் கொண்டிருந்தனர் . 1962.06.02 உடுகொட அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின் அதிபர் மர்ஹும் A.L.M. ஸக்கரியா அவர்களது காலத்தில் இருந்து மாணவர்களுக்கான சில மரத்தளபாடங்களும் ஆசிரியர் மேசை கதிரைகளும் அங்கு கொண்டு செல்லப்பட்டதாக குறிப்புகள் காணப்படுகின்றன.

தொடர்ந்து கலாசாலையின் அதிபர்களாக மர்ஹும் M.S.M. ரசீத் (1968-1970) மர்ஹும் அல்ஹாஜ் A. 
W.M. ஷாபி (1970-1971) மர்ஹும் ஹவாஸ் ஆகியோரது பாடசாலை நிர்வாக பொறுப்பை ஏற்று தம் பணியை செவ்வனே செய்து வந்துள்ளனர்.

1970 களின் பின்னர் அல் பத்ரியா அதன் பொற்காலத்தை அடைந்தது 1977 வரை அந்த காலம் மங்கியும் பிரகாசித்தும் மாறி மாறி வந்துள்ளது. 1972.01.02 வித்தியாலயமாக காணப்பட்ட எமது பாடசாலை மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது இதன் வளர்ச்சியில் ஒரு மைற்கல்லாகும். ஆசிரியர், மாணவர்,  பெற்றோர் இணைப்பு இதற்கு பெரும் துணை புரிந்தது.

உருப்படியான மாணவர் குழாமும், உத்தமமான ஆசிரியர்களும்,  பெருந்தன்மை மிக்க பெற்றோர்களும் அல்பத்ரியா என்னும் கலைத்தீபத்தை காத்து நின்றுள்ளனர். தொடர்ந்தும் மர்ஹும் N.C. நைனார் (1975-1979) மர்ஹும் A.M.M. இலியாஸ் (1979-1980) மர்ஹும் M.D.M. அன்சார் (1980-1982) A.W.M. ஷாபி ஆகியோர்கள் அதிபராக பெரும் பங்காற்றி உள்ளனர்.