சிங்களப் புத்தாண்டு உணவு மேசை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

 

அகிலம் எல்லாம் படைத்தாள்பவனே

அருள் தருவாயெமக் கணுதினமே //

 

முல்லையும் மருதமும் வீற்றிருக்கும்

மோகனமாம் கஹட்டோவிட்டாவில்

செல்வமெல்லாம் தரும் பூவனமே

திகழும் அல்பத்ரியா கலையகமே //

 

அன்னை தந்தை தரும் பாசமெல்லாம்

அருவி என்றே இங்கு ஊற்றெடுக்கும்

பொன்னுல சேர் பரிபாலகரை

போற்றிடுவோம் அக நிறைவுடனே

 

(அகிலம் எல்லாம்)

 

அறிவுடன் பண்பை ஊற்றிவரும்

அதிபரை ஆசான் மார்களினை

நிறைவுடன் உள்ளம் போற்றிடுவோம்

பேரருள் தாராய் ரஹ்மானே //

 

அணிதரும் பண்பும் அறிவுகளும்

அன்னை தந்தையாய் வழிகாட்டும்

பணிசெய்யும் வாழ்வும் ஒளிபெறவே

நல்லருள் தாராய் ரஹ்மானே

 

(அகிலம் எல்லாம்)