சிங்களப் புத்தாண்டு உணவு மேசை

page-header-1900x320.jpeg
page-header-1900x320.jpeg

பிரதி அதிபர் செய்தி

ஏ.ஆர்.எஸ். லாஹிரா

மேல் மாகாண கம்பஹா மாவட்டத்தில் அத்தனகல்ல பிரதேசத்தில் முல்லையும் மருதமும் சேர்ந்த பிரதேசமான கஹட்டோவிட்டாவில்  எட்டுத்திக்கும் ஒளி கொடுக்கும்  கலங்கரை விளக்காய் விளங்கும் அல்பத்ரியா மகா வித்தியாலயம், சுமார் 135 வருடங்களை எட்டியுள்ள போதும் இன்னும் இளமை தோற்றத்தில் சற்றும் குறைவின்றி தலை நிமிர்ந்து நிற்கிறது. 


பல துறைகளிலும் ஒளி  வீசக்கூடிய கல்விமான்களை உருவாக்குவது மட்டுமின்றி ,ஆன்மீகத் துறையிலும், ஒழுக்க விழுமியங்களிலும் மிளிரக்கூடிய  நல்லதொரு சமூகத்தை உருவாக்குவதே தனது இலக்காகக் கொண்டுள்ளது.

இலட்சியப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் இக் கலையகம் கல்வியிலும் ஏனைய இணைப்பாட விதானத் துறைகளிலும் பல சாதனையாளர்களை உருவாக்கி    முழு உலகிற்கும் ஒளி கொடுக்க வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்வதுடன், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏ.ஆர்.எஸ். லாஹிரா
பிரதி அதிபர்
அல் பத்ரியா மகா வித்யாலயம்.