அதிபர் செய்தி
எம்.ஏ.எம். அஸ்மீர்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.
135 வருடங்கள் கடந்த நீண்ட, கீர்த்தி மிகு வரலாறு கொண்ட கஹட்டோவிட்ட அல்பத்ரியா மகா வித்தியாலயத்தின் உத்தியோகபூர்வ இணையத் தளத்துக்கான ஆசிச் செய்தியை வழங்குவதில் அதிபர் என்ற வகையில் மிகுந்த சந்தோசம் அடைகின்றேன்.
நீண்ட வரலாறு கொண்ட எந்த நிறுவனமும் அது கடந்து வந்த பாதைகளில் பெற்றுக்கொண்ட அதிக தகவல்களை, சாதனைகளை, ஆவணங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இவ் வகையில் நூற்றாண்டு கடந்த எமது பாடசாலையும் நிறையவே தகவல்களைப் பதிந்தும் பதியாமலும் வைத்துக்கொண்டிருக்கின்றது.
உண்மையில் நிறுவன இணையத்தளம் என்பது குறித்த நிறுவனத்தின் வரலாற்றுப் பெறுமதி மிகக் தகவல்களைப் போலவே நடப்புத் தகவல்களையும் தன்னகத்தே பதிவேற்றிவைக்கவும் எவரும் எப்போதும் அவற்றைப் பார்வையிடவும் பயன்பெறவும் பெரிதும் துணைசெய்கின்றது. இது உயிர்வாழும் ஆவணக் காப்பகம். அதேபோன்று பாடசாலை தொடர்பான இற்றைப்படுத்தப்பட்ட தகவல்களை சமூகத்துக்கு வெளிப்படைத்தன்மையோடு வழங்கும் சாளரம்.
நீண்ட காலத்தின் பின்னரேனும் இம் முயற்சி ஆரம்பிக்கப்பட்டமையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள தகவல் தொழிநுட்பப் பாட ஆசிரியர்களையும் உயர் தரத்தில் இப்பாடத்தைப் பயிலும் மாணவர்களையும் நன்றியுடன் நினைவுகூர்கின்றேன்.
இவ் இணையத்தளம் ஊடாக பாடசாலைக்கும் சமூகத்துக்கும் இடையிலான நல்லுறவையும் அந்நியோன்னிய புரிந்துணர்வையும் பாடசாலை பற்றிய நேரிடையான பிரதிமையையும் கட்டியெழுப்பலாம் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
இம்முயற்சி வெற்றியடையும் தொடரவும் மனமார ஆசிக்கின்றேன்.
எம்.ஏ.எம். அஸ்மீர்
அதிபர்
Al-Badriya Maha Vidyalaya.





